God Messages :- Bro. J. Melchizedek,

You are here: Home About Us

About Us

Bro. J. Melchizedek,

Word is Life began its operation in the year of 1985 with a strong intention and a clear vision to serve the Lord by serving His people and proclaiming His good news and salvation to them.

The ministry was set up by Brother J. Melchizedek at Nanguneri by registering Word is Life as a non - profit Organization under the Government of India rules. Thereafter the ministry began to grow and Brother J. Melchizedek his maximum time entirely in the service of God by organizing and bringing out various activities and programmes to fulfill the mission he was called for. Today, Word is Life carries out a number of activities that are described below in respect to the proclamation of Gods word and service to humanity.

Word is Life does not have any branches and does not have any intention to open branch churches. Its main aim is to strengthen the people with the Word of GOD. Word of GOD has to be shared among Christians and non christians also. Sound doctrines are preached and telecasted for this purpose without any monetary benefit. All the events are organised by the grace of GOD and by prayers only. We also expect your prayers only.Kindly remember us in your prayers.

சகோதரரின் சாட்சி....

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். இக்கடிதம் மூலம் கிறிஸ்துவுக்குள் சொந்தமானதை தெரிவிப்பதற்கு கர்த்தர் கொடுத்த கிருபைக்காக அவருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.

ஆதி கிறிஸ்தவக் குடும்பத்திலே கி.பி. 1962-இல் பிறந்த நான் 1984-இல் தான் உண்மையான கிறிஸ்தவனாக அல்லது மறுபடியும் பிறந்தவனாக மாற்றப்பட கர்த்தர் கிருபை செய்தார்.

இளம் வயதில் இருந்தே கர்த்தருக்கேற்றப் பாதையில் வளர்க்கப்படக் கர்த்தர் கிருபை செய்தார். எனது வீட்டில் இருந்து 10 அடி தூரத்தில் உள்ள C.S.I. Christ Church என்னை பக்திப் பாதையில் நடத்திச் செல்ல ஏதுவாக இருந்தது. எனது பெற்றோர்கள் மத்திய, மத்திய மாநில ஊழியர்களாக இருந்தார்கள். நான் எனது பெற்றோருக்கு ஒரே ஆண்மகனாகவும் இருந்தேன்.

எனது ஊழிய நாட்களில் எனது பெற்றோருக்கு எந்த வகையான இழுக்கானப் பெயரும் உருவாக்கமலும், ஊரில் எல்லாறாலும் நல்லவன் என்கிற பெயரிலும் இருப்பதற்கு கர்த்தர் உதவி செய்தார். இப்படி சன்மார்க்கமான வாழ்க்கை வாழ்ந்து வருவதற்கு கர்த்தர் துணை புரிந்தார்.

தாயின் கர்ப்பத்தில் என்னை எனது ஆம்டவர் தெரிந்து கொண்டதினால் எநேக பாவச்சூழ்நிலையில் இருந்து காத்துக் கொண்டார்.

1978-ஆம் ஆண்டு முதல் ஆலயத்தில் ஆண்டவருக்கென சில காரியங்களை பொறுப்பாக செயல்பட கர்த்தர் உதவி செய்தார்.

நான் கிறிஸ்தவப் பெற்றோருக்கு பிறந்ததினால் நமக்கு இயேசு கிறிஸ்து ஆண்டவர் சொந்தமானவர் என்று தெரிந்து வைத்திருந்தேனேயன்றி அவர்தான் ஆண்டவர் அவரைத் தவிர மேலே வானத்திலும் கீழே பூமியிலும் வேறொரு தெய்வம் இல்லை என்கிற அறிவு இல்லாதிருந்தது.

11-ஆம் வகுப்பு படிக்கும் போது பிரசங்கம் செய்ய ஆரம்பித்தேன். மெய்யான மனமாற்றம் இல்லாமல் எனது ஆசிரியர் பயிற்சியின் போது ஜெபக்குழு நடத்தினேன். அப்போதெல்லாம் எனக்குள் இருந்த வண்ணம் எப்படி இருந்தது எனில். நான் இளவயதில் இப்படிப்பட்டச் செயல் செய்தால் எதிர்காலம் ஆசீர்வாதமாகவும், சிறப்பாகவும் இருக்குமென்றும் இம்மைக்காவே நான் கிற்ஸ்துவை ஆராத்த்தும் அவருக்கெந் எதையாவது செய்து கொண்டும் இருந்தேன்.

இப்படி இருந்த என் வாழ்வில் என் ஆண்டவர் அவரது வசனத்தின்படி இடைபட்டார். எப்படியெனில் 1984-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் வைத்து ஒரு முழு இரவு ஜெபத்தில் (வட சென்னை முழு இரவு ஜெபம் என்கிற பெயரில் நடைபெற்றது) கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்பைக் கொடுத்தார். அதில் ஒரு ஊழியரின் செய்தி என்னுடைய சின்தனையை மாற்றியது. அன்றே எனது வாழவை ஆண்டவருக்கு அர்ப்பணித்தேன்.

நான் ஆண்டவரை ஏற்றுக் கொள்ளும் போது எனது சரீரத்தில் வியாதியில்லை, கவலை இல்லை, உலக வாழிவில் சகலமும் சம்பூரணமாக இருக்கும்போது தேவனுடைய வசனம் எனது சிந்தனையை மாற்றியது. எப்படியெனில் கிறிஸ்துவாகிய இயேசுவை பிதாவாகிய தேவன் அவரை நம்பும் அல்லது உண்மையாய் அவரை பின்பற்றும் அல்ல்து ஏற்றுக்கொள்ளும் அல்லது விசுவாசிக்கும் மக்களுக்கு மிகப்பெரிய மீட்பை வைத்திருக்கிறார். அவர் மூலம் நித்திய வாழ்க்கை உண்டு. “நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்கு செய்த வாக்குத்தத்தம்” 1 யோவான் 2:25 “இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால் எல்லா மனுஷரைப் பார்க்கிலும் பரிதபிக்கப்பட்டவர்களாயிருப்போம்” 1 கொரி. 15:19 என்கிற வசனங்களும் மறுமையின் வாழ்வைக் குறித்த நம்பிக்கையும், நாம் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ளத்தான். கிற்ஸ்து இவ்வுலகில் அனுப்பப்பட்டார் என்கிற உம்மை சத்தியங்களும், அவரது இரத்தத்தின் மூலம் பாவ மன்னிப்பு, மெய் சமாதானம் போன்ற ஆசீர்வாதங்களான செய்தியும் என்னை அவரோடு அதிகமாக நெருங்க வைத்தது.

இதுவரை ஆண்டவரைக் குறித்த எனது எண்ணத்தில் பெரிய மாற்றத்தைத் தந்தார். இம்மைக்குரிய எதிர்பார்ப்போடு பின்பற்றி வந்த என்னை மறுமைக்குரிய காரியங்களே சிந்திக்க வேத வசனம் என்னை மாற்றியது. அம்மாத முதலே எங்கள் சொந்த ஊரில் உள்ள தேவாலயத்தில் உபதேசியார் என்கிற (Cathechist) ஊழியப் பொறுப்பை ஏற்று இறைப்பணிக்கு என்னை அர்ப்பணித்தேன்.

நான்கு ஆண்டு காலம் எனது அந்த பொறுப்பில் இறைப்பணி செய்ய எனது ஆண்டவர் அனுமதி கொடுத்தார். அந்த நான்கு ஆண்டுகளும் எனக்கு ஊழியப் பயிற்சி ஆண்டுகளாக இருந்தது. காலை, மாலை ஆராதனைக்கு என்னை தயார்படுத்துவது முதல் மணி அடிப்பதற்கு முன்னமே ஆலயத்தில் ஜெபத்தில் வீழ்ந்து கிடப்பது, புதிய புதிய செய்திகளை வேத வசனத்தில் இருந்து கலப்படம் இல்லாமல் பிரசங்கிப்பது மாதந்தோறும் முழுஇரவு ஜெபங்கள், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கண்வென்ஷன் கூட்டங்கள், போன்ற செயல்களையும் எதையும் சோர்போடல்லாமல், ஒவ்வொன்றிற்கும் முக்கியத்துவம் கொடுத்து செய்வதற்கு ஆண்டவர் உதவி செய்தார். தேவ வழி நடத்துலின் படி 1988-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை அப்பணியை நிறைவேற்றி பின் அழைக்கப்பட்ட இடங்களுக்கு இறைபணிக்காக செல்ல ஆரம்பித்தேன்.

“பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும் யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும் புமியின் கடைசி பரியந்தம் எனக்கு சாட்சிகளாயிருபீர்கள்” அப். 1:8

என்ற லசனத்தின்படி செந்த ஊரிலும் பின்னர் பக்கத்து ஊர்களிலும், பின் பக்கத்து மாவட்டங்களிலும், நேரிடையாகவும் தொலைக்காட்சி வாயிலாதவும் பின்னர் உலக முழுவதும் Website மூலமாதவும் இறைபணி செய்யக் கூடிய கிருபைக் கொடுத்து வருகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

என் ஆண்டவர் அவரது விலையேறபெற்ற இரத்தம், மீட்பு, கிருபை இவைகளை விலைக் கிரயமில்லாமல் இலவசமாக தந்து கொண்டு இருப்பதால் இந்த இறைப்பணியையும் இலவசமாக செய்வதற்கு ஆண்டவர் கொடுத்து வருகிற ஈவை நினைத்து ஆண்டவரைத் துதிக்கிறேன்.

ஆண்டவருக்கு செலவு பண்ணவும் செலவு பண்ணப்படவும் என்னை அர்ப்பணிக்க கர்த்தர் கிருபை கொடுத்திருக்கிறார். இறைப்பணியில் ஜெபத்தோடு ஊக்கப்படுத்தும் நல்ல மனைவியும் கரத்தருக்கு பயந்த நான்கு பிள்ளைகளும் என் மீது அக்கரையுள்ள உறவினர்கள் மற்றும் உடன் பிறப்புகளுக்காகவும் ஜெபியுங்கள்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
மீட்பரின் பணியில்

16

DEC

Children's Christmas Fellowship

Wednesday, December 16 @ 7:30 PM

16

DEC

Children's Christmas Fellowship

Wednesday, December 16 @ 7:30 PM

16

DEC

Children's Christmas Fellowship

Wednesday, December 16 @ 7:30 PM

16

DEC

Children's Christmas Fellowship

Wednesday, December 16 @ 7:30 PM

16

DEC

Children's Christmas Fellowship

Wednesday, December 16 @ 7:30 PM

16

DEC

Children's Christmas Fellowship

Wednesday, December 16 @ 7:30 PM

More Details...

Word is Life Ministries | ADDRESS: #116, Church Street, Muntradaippu & Post, Nanguneri TK - 627152, Tirunelveli DT, South India | PHONE: +91 9443614676 | E-Mail :

Home | About Us | Listion Online | Ministries | Donate | Contact Us